சத்ரபதி சிவாஜி மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா படமாகிறது.!!
Chhatrapati Shivaji son sambhaji history movie
சரித்திர படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்கனவே ராஜராஜ சோழன், ஜான்சிராணி , அக்பர், பிரிதிவிராஜ் உள்ளிட்ட பலரது வாழ்க்கை படங்கள் வந்துள்ளன.
இந்த வரிசையில் தற்போது மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக இருக்கிறது. சாம்பாஜியின் வீரம்,தியாகம், போர்தந்திரம் போன்ற விஷயங்களும் மனைவியுடன் அவருக்கு இருந்த காதல் இவ்விரெண்டும் இடம்பெறுகிறது.

இப்படத்தில் சாம்பாஜி மகாராஜா கதாபாத்தில் பிரபல இந்தி நடிகர் விக்கி கவுசல் நடிக்கிறார். நாயகியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சாம்பாஜி மகாராஜாவாக நடிக்கும் விக்கி கவுசல் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.
English Summary
Chhatrapati Shivaji son sambhaji history movie