வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை - திருப்பூரில் பரபரப்பு.!
harassment to odisa women in tirupur
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 17-ம் தேதி திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை தேடி ரயிலில் வந்தார். அதன் படி அவர்கள் திருப்பூரில் வேலை தேடி அலைந்து பார்த்தும் எங்குமே வேலை கிடைக்காத நிலையில் அனைவரும் புஷ்பா ரயில்வே சந்திப்பு அருகே நின்றிருந்தனர்.
அப்போது மூன்று பேர் தங்களின் பனியன் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்றுக் கூறி, லட்சுமி நகர் பகுதியில் உள்ள அவர்கள் தங்கியிருந்த அறைக்கு இளம் பெண் உள்பட 3 பேரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் இன்று இரவு தங்கள் அறையிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று கூறியதையடுத்து ஆறு பேரும் இரவு உணவு உட்கொண்டு விட்டு அறையில் தூங்கி உள்ளனர். அப்போது வாலிபர்கள் மூன்று பெரும் 3 வயது குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
உடனே அங்கிருந்து வெளியேறிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சம்பவம் குறித்து வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்டவர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
harassment to odisa women in tirupur