வைரமுத்துவுடன் ராஜா ராணி அர்ச்சனா.. சின்மயி முந்திக்கொண்டு போட்ட அட்வைஸ் போஸ்ட் வைரல்.!  - Seithipunal
Seithipunal


சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். இது தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனால் இருவருக்கும் இடையில் பனிப்போர் ஏற்பட்டது. சின்மயிக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் கிளம்பியது  இதன்பின் வைரமுத்து எந்த படங்களில் ஒப்பந்தமானாலும் சரி அவரை விமர்சித்து இவருக்கெல்லாம் எதற்கு வாய்ப்பு தருகிறீர்கள் என்று ட்வீட் போட்டு பங்கம் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் சமீபத்திய அவரது ட்விட்டர் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது  ராஜா ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்தான் விஜே அர்ச்சனா. தற்போது விஜே அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவுடன் சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

இதை பார்த்த சின்மயி, "இப்படித்தான் ஆரம்பிக்கும். போக போக தான் தெரியும். வைரமுத்துவை யாரும் இல்லாமல் தனிமையில் சந்திப்பதை தவிர்த்து விடுங்கள்." என்று அட்வைஸ் செய்துள்ளார். இந்த பதிவுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinmayi advice to Vairamuthu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->