25 வருடங்களுக்கு முன்னால் சியான் விக்ரம் செஞ்ச வேலையை பாருங்க! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
chiyaan vikram did dubbing for two actors in a same movie
35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருப்பவர் சியான் விக்ரம். கடந்த சில ஆண்டுகளாக தான் அவரது வெற்றி படங்களின் மூலம் முன்னணி கதாநாயகராக அறியப்பட்டாலும் 80களின் இறுதியில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அவர்.
ஆரம்பத்தில் பல படங்களில் தொடர் தோல்விகளால் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார் சியான் விக்ரம். 90களில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களில் இளம் ஹீரோக்களுக்கு வாய்ஸ் டப்பிங் கொடுத்தது சீயான் விக்ரம் தான்.
அந்த காலகட்டங்களில் அறிமுகமாகிய ஒரு சில வெற்றி படங்களை கொடுத்த நடன இயக்குனர் பிரபுதேவாவுக்கு விக்ரம் தான் பின்னணி கொடுத்திருக்கிறார். மேலும் காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன நடிகர் அப்பாஸ் இருக்கும் பின்னணி குரல் கொடுத்தது விக்ரம் தான்.
இந்த இரண்டு பேருக்கும் விக்ரம் குரல் கொடுத்து வந்த நிலையில் இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. விஐபி என்ற திரைப்படத்திற்காக அப்பாஸ் மற்றும் பிரபுதேவா இருவரும் இணைந்து நடித்த அந்த படத்தில் இரண்டு பேரின் குரலும் ஒரே மாதிரி இல்லாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாக தனித்தனியாக குரல் கொடுத்திருக்கிறார் விக்ரம். படம் ரிலீஸ் ஆகி நீண்ட நாட்கள் கழித்து தான் இருவருக்கும் அவர் ஒருவரே குரல் கொடுத்தார் என்ற விஷயமே தெரிந்திருக்கிறது.
English Summary
chiyaan vikram did dubbing for two actors in a same movie