படத்தில் அநியாயத்தை தட்டி கேட்கும் நடிகர்கள்.. டிக்கெட் விலையை கூட கேள்வி கேட்பதில்லை.!
cinem ticket rate robbery
கொரோனா வைரஸ் பரவுவதால் மக்கள் அதிகம் தியேட்டருக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், வரும் பொதுமக்களுக்கு அதிகப்படியான கட்டணம், ஆன்லைன் பதிவு கட்டணம், உணவு பொருட்களில் அதிகபட்ச விலை என்று பல விஷயங்களை தியேட்டர் உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.
முதல் நாள், முதல் காட்சி, சிறப்பு காட்சி என்ற பெயரில் தியேட்டர்கள் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. உரிய வருவாய் கிடைப்பதில்லை. சிறப்புக் காட்சிகளுக்கு கட்டணமாக 1000,500 என்று வசூலிக்கின்றன.
சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தில் கூட இதுதான் நிலை. 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வெளியாகவுள்ள சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திற்கும் அதிகாலை சிறப்பு காட்சிகள் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக ரூ.300 என்று தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.
ஆனால் இந்த டிக்கெட்டுகளின் விலையில் சாதாரண கட்டணம் தான் அச்சடிக்கப்பட்டுள்ளது. அநியாயத்தை தட்டிக் கேட்கும் விதமாக பேசும் ரசிகர்களின் படங்களில், டிக்கெட் கூட இப்படித்தான் விற்கப்படுகின்றது. இதற்கெல்லாம் எந்த நடிகரும் குரல் கொடுப்பதே இல்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.
English Summary
cinem ticket rate robbery