பிரபல நடிகர் திடீர் மரணம்! முன்னணி நடிகர்கள் இரங்கல்!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் அனில் முரளி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

56 வயதான முரளி 1993-ம் ஆண்டு வினயன் இயக்கத்தில் வெளியான 'கன்னியாகுமரியில் ஒரு கவிதா' என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். . பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

பல்வேறு மொழிகளில் சுமார் 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அனில் முரளிக்கு  கல்லீரல் பிரச்சினை இருந்துள்ளது. சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு  உடல்நிலை மோசமானதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 30) காலையில் உயிரிழந்தார்.

நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் அனில் முரளி நடித்திருந்தார். ஊரடங்கிற்கு முன்னதாக மார்ச் 13-ம் தேதி சிபிராஜ் நடிப்பில் வெளியான 'வால்டர்' படத்தில் அனில் முரளி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு சூமா என்ற மனைவியும், ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் இருக்கிறார்கள். அனில் முரளியின் திடீர் மறைவுக்கு முன்னணி நடிகர்களான மம்மூட்டி, ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினரும் சமூக வலைதளம் மூலம் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cinema actor anil murali passes away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->