பஞ்சாப்பை அவமானப்படுத்த முயற்சிக்கிறது: மத்திய அரசு மீது பகவந்த் மன் பரபரப்பு குற்றச்சாட்டு!
Bhagwant Mann accuses Centre of trying to humiliate Punjab
அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த இந்தியர்களை அழைத்து வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். முன்னதாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்படுவர்ர்கள் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.அந்தவகையில் அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் பணியை அந்த நாடு மேற்கொண்டு வருகிறது. அப்போது இதில் இந்தியர்களும் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

அதனைத்தொடர்ந்து முதல்கட்டமாக 104 பேர் அண்மையில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.இதையடுத்து அப்போது கடந்த 5-ம் தேதி அவர்கள் வந்த விமானம் பஞ்சாபின் அமர்தசரசில் தரையிறங்கியது. மேலும் அமெரிக்காவில் இருந்து மேலும் இரண்டு விமானங்களில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானம் பஞ்சாபில் நாளை தரையிறங்கும் என தெரிகிறது.
இந்தநிலையில் இது தொடர்பாக பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களுடன் வரும் விமானம் நாளை அமிர்தசரசில் தரையிறங்குகிறது என்றும் இந்த விமானத்தை அமிர்தசரசில் தரையிறக்குவதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் கூற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கடந்த 5-ம் தேதி வந்த, முதல் விமானத்தில் வந்தவர்கள் பெரும்பாலானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆனால், அந்த விமானத்தை ஆமதாபாத்திற்கு அனுப்பி வைக்காமல், அமிர்தசரசில் தரையிறக்கியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மன் பஞ்சாபின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அமிர்தசரஸ் நகர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது" என விமர்சித்துள்ளார்.
English Summary
Bhagwant Mann accuses Centre of trying to humiliate Punjab