நாடு கடத்தப்பட்ட மேலும் 119 இந்தியர்கள் இன்று வருகை! - Seithipunal
Seithipunal


119 இந்தியர்களுடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ள விமானம் இன்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். முன்னதாக  அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்படுவர்ர்கள் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.அந்தவகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த வாரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் 2-வது கட்டமாக மேலும் 119 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.இதில்  119 இந்தியர்களுடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ள விமானம் இன்று சனிக்கிழமை இரவு 10 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை வந்தடையும் என்று கூறப்படுகிறது.

மேலும் திருப்பி அனுப்பப்படும் 119 இந்தியர்களில் 67 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்றும் 33 பேர் அரியானாவை சேர்ந்தவர்கள் என்றும்  8 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இவர்கள் தவிர கோவா, மராட்டியம் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தலா 2 பேர் இமாசலபிரதேசம் மற்றும் காஷ்மீரை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

119 more deported Indians arrive today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->