காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சி துணை தலைவரின் மனைவிக்கு ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு..? - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்.பி.யான ராகுல், லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக அசாமின் ஜோர்ஹாட் தொகுதியில் தேர்வான காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் பதவி வகிக்கிறார். இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிறந்த எலிசபெத் கோல்பர்ன் என்பவரை, 2013-இல் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், எலிசபெத் கோல்பர்ன் தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்கும், கவுரவ் கோகோய்க்கும், பா.ஜ.க, தலைவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து பா.ஜ.க-யின் மூத்த தலைவர் அஜய் அலோக் கூறுகையில்; அசாம் எம்.பி., கவுரவ் கோகோயை திருமணம் செய்வதற்கு முன், எலிசெபத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன்  தொடர்பு இருந்தது தெரியுமா? என்றும், பாகிஸ்தான் திட்ட கமிஷன் தலைவராக இருந்த அலி தாகீர் சேக் உடனும், அவர் பணியாற்றி இருக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் சீர் குலைக்கும் ஜார்ஜ் சோரஸின் நண்பரான அமெரிக்க எம்.பி., தாம் உடனும், எலிசபெத்துக்கு நட்பு உண்டு என்று கூறியுள்ளார்.

மேலும், வெளிநாடுகளுக்கு வளர்ச்சி நிதியாக அமெரிக்கா அளிக்கும் பணத்தை, 'காரிடாஸ்' என்ற அமைப்பின் வாயிலாக பெற்று, இந்தியாவில் மதமாற்றப் பணிகளில் எலிசபெத்தின் அண்ணி ஈடுபடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014-இல் முதன் முறையாக எம்.பி.,யானதும் சபாநாயகர் அனுமதியோ, உள்துறை அமைச்சக அனுமதியோ பெறாமல் பாகிஸ்தான் துாதரகத்துக்கு கவுரவ் கோகோய் சென்றது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து,  இந்திய கடலோர கடல் பாதுகாப்பில் எத்தனை ரேடார்கள் அமைக்க திட்டம் உள்ளது என லோக்சபாவில் கேள்வி கேட்டது ஏன்? எனவும் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.

அத்துடன் அவர் மேலும் பேசுகையில், பாகிஸ்தான் துாதரக கட்டளையை ஏற்று அந்த கேள்வியை கேட்டாரா? தேச பாதுகாப்பு தொடர்பான இந்த விஷயத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா  கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் விளக்கம் தர வேண்டும் என்று கோரியுள்ளார்.

குறித்த அஜய் அலோக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகாய், “என்னையும், என் குடும்பத்தையும் இழிவு படுத்துவதற்கு, அதீத எல்லைக்கு பா.ஜ.க, சென்றுள்ளது. பா.ஜ.க, கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. இது தொடர்பாக, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்,” என்றார்.என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Lok Sabha opposition deputy leader wife has links with ISI


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->