மார்க் ஆண்டனி திடீர் தடை! விஷால் நேரில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Court bans actor Vishal MarkAntony film release
நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட தடை விதித்தும், செப்டம்பர் 12ஆம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 21.29 கோடி கடன் பெற்றிருந்தார். அந்த கடனை செலுத்துவதாக ஒப்புக்கொண்டு லைகா நிறுவனம் செலுத்தியது.
இந்த கடன் தொகையை நடிகர் விஷால் திருப்பி செலுத்தும் வரை அவர் நடிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை மீறி திரைப்படத்தை வெளியிடப் போவதாக விஷாலின் நிறுவனம் அறிவித்தது.
இதனை எதிர்த்து லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி லைக்கா நிறுவனத்திற்கு விஷால் கொடுக்க வேண்டிய ரூ. 21.29 கோழியில் ரூ. 15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நபர்கள் நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்ததோடு, விஷால் அந்த தொகையை தனி நீதிபதியின் முன்னிலையில் செலுத்தாவிட்டால் விஷால் தயாரிக்கும் அனைத்து திரைப்படங்களுக்கும் தடை விதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் உத்தரவிட்ட ரூ. 15 கோடியை இன்னும் நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாலும், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அதேபோன்று 2022 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி நடிகர் விஷால் தனது சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை எனவும், தன்னிடம் நிதி ஆதாரம் ஏதுமில்லை என்ற தெரிவித்த அன்றே மினி ஸ்டுடியோ உரிமையாளர் வினோத்குமார் இடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளார்.
இது மூலம் நீதிமன்றத்திற்கு அவர் தகவல் தவறான தகவலை அளித்துள்ளார் என லைகா நிறுவனம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத நடிகர் விஷால் செப்டம்பர் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், அவர் நடித்து வெளியாக உள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
English Summary
Court bans actor Vishal MarkAntony film release