இந்திய திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே நினைவு தினம்..!! - Seithipunal
Seithipunal


தாதாசாஹேப் பால்கே :

இந்திய திரையுலகின் தந்தை தாதாசாஹேப் பால்கே 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவரது இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.

பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர் இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் அவரே மேற்கொண்டார்.

1913ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டு இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.

தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.

தன் வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் இந்திய அரசு 1969ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இவரது பெயரில் விருது வழங்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dadashheb phalke memorial day 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->