சாந்தனு பாக்யராஜால் தள்ளிப்போகும் துருவ் விக்ரமின் புதிய படப்பிடிப்பு! கடுகடுப்பில் வாரிசு நடிகர்.!
Dhruv Vikram new movie gets postponed due to Shantanu Bhagyaraj What was the reason
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தனு பாக்யராஜ். இவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைத் துறையில் இருந்தாலும் தனது இடத்திற்காக இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் வெளியான பாவ கதைகள் மற்றும் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு பெயர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இராவணக்கோட்டம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். இந்தத் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் துபாயில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரெய்லர் காட்சிகளை வைத்து பார்க்கும் போது திரைப்படம் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு வைத்து உருவாக்கியிருப்பது தெரிகிறது. கிராமப்புறங்களில் நடைபெறும் கபடி போட்டிகள் அவற்றினால் ஏற்படும் பகை ஆகியவற்றை சுற்றி கதை நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கலாம் என திரையுலகினர் கணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கயிருந்த புதிய திரைப்படத்தின் சில நாட்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார். அவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படமும் கபடியை மையமாக வைத்து உருவான கதைக்களமாக இருப்பதால் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய கதைக்களங்களாய் என பார்த்துவிட்டு அதன் பிறகு தனது புதிய திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Dhruv Vikram new movie gets postponed due to Shantanu Bhagyaraj What was the reason