கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்தாரா எச்.வினோத்.? மறைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
Did HVinoth work in Koyambedu market Shocking information shared by late director and producer Mano bala
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் எச் வினோத். சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற மீண்டும் ஒரு வெற்றி படத்தையும் கொடுத்தார்.
தொடர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்ததால் இவருக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் காண நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்குமாரை வைத்து வலிமை மற்றும் துணிவு என்ற இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் போன்றோரும் இவரிடம் கதை கேட்டு வருகின்றனர். இந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் எச். வினோத்தின் ஆரம்ப கட்டத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை ஒரு பேட்டியின் போது பகிர்ந்திருக்கிறார் மறைந்த நடிகரும் இயக்குனருமான மனோபாலா. அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.
சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் நடிகர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி இருக்கிறார் வினோத். அப்போது இவர் சதுரங்க வேட்டை கதையை எழுதி ராஜ் முருகனிடம் காட்டியுள்ளார். அவருக்கு கதை பிடித்துப் போக இவர் பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை கூறி இருக்கிறார். ஆனால் யாரும் இந்த கதையை திரைப்படமாக எடுக்க முன்வரவில்லை. இந்த காலகட்டத்தில் தனது கஷ்டம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்திருக்கிறார் எச் வினோத். அதன் பிறகு இந்த கதையை கோலி சோடா திரைப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டனிடம் கூறியுள்ளார். அவர் இயக்குனர் லிங்குசாமியிடம் இந்த கதையை பற்றி சொல்லி வினோத்தை சந்திக்க சொல்லி இருக்கிறார். இயக்குனர் லிங்குசாமியின் மூலமாக தயாரிப்பாளர் மனோபாலாவிடம் இந்த கதை வந்திருக்கிறது. அவர்தான் எச்சி வினோத்தை வைத்து சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கினார். இன்று அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
English Summary
Did HVinoth work in Koyambedu market Shocking information shared by late director and producer Mano bala