52 வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த விஜய் பட தயாரிப்பாளர்.!
Dilraju gets male baby
தமிழ் சினிமாவின் தளபதி என்ற கொண்டாடப்படும் நடிகர் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். அடுத்ததாக அவர் வம்சி இயக்கத்தில் நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை தில்ராஜு தயாரிக்க இதற்கு தமன் இசையமைக்கிறார். அத்துடன் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தை தயாரிக்கும் தில் ராஜுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தில் ராஜுவுக்கு 52 வயதாகும் நிலையில் கடந்த 2017-இல் அவரது மனைவி உயிரிழந்தார். இதில் அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இதனை தொடர்ந்து, அந்த பெண் குழந்தை வற்புறுத்தியதன் பேரில் 2020இல் தில் ராஜூ இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ராஜுவுக்கு இரண்டாவது மனைவியுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.