‘திமுகவுக்கு முட்டுக்கொடுக்கிறீர்களா?’ என்று கேட்கிறார்கள்...! அரங்கை அதிரவைத்த திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற 'என் பெயர் அம்பேத்கர்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது, "திராவிட கட்சிகளுடன் முரண்பாடுகள், மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் எங்களுக்கும் உண்டு. 

ஆனால், திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தி, சனாதன கட்சிகள் நாட்டிற்கு ஆளுகை அமைப்பதை அனுமதிக்க முடியாது. அதிமுக பாஜகவுடன் இணைந்தால் ஆபத்து ஏற்படும் என்பதையே எங்களின் கவலையாகக் கூறுகிறோம். 

அதிமுக பலவீனமடைந்தால், பாஜக அதே இடத்தில் செருகிக்கொள்ளும் அபாயம் அதிகம். திமுக ஒரு தேர்தல் கட்சி, அது தற்போது ஆளும் கட்சி. அதைக் கொண்டுதான் விமர்சிக்கிறோம். ஆனால், திமுகவை விமர்சிக்கும் போர்வையில் திராவிட அரசியலையே தோற்கடிக்க நினைப்பது ஆபத்தானது.  

நாங்கள் எந்த பதவிக்கும் ஆசைப்படாமல் செயல்படுகிறோம். ‘திமுகவுக்கு முட்டுக்கொடுக்கிறீர்களா?’ என்று கேட்பவர்கள் உள்ளனர். ஆனால், திராவிட அரசியலை பேசும் ஒரு கட்சி திமுக மட்டுமே. விமர்சனங்கள் வந்தாலும், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நீடிக்கிறது" என்று தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viduthalai siruthaigal party thirumavalavan VCK DMK Alliance 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->