நல்லாட்சி என்பது பா.ஜ.,வின் அடையாளம்; பிரதமர் மோடி பெருமிதம் - Seithipunal
Seithipunal


'நல்லாட்சி என்பது பா.ஜ.,வின் அடையாளம்' என பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார். 

இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ என்ற இடத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதன் போது   நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். 

குறித்த நிகழ்ச்சியில், மோடி  பேசியபோது; 
கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு அறிவிப்புகளை வெளியிடுவதில் நிபுணத்துவம் பெற்றதாக இருந்தது. இருந்தாலும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை. பிரதமரான பிறகு, பழைய திட்டங்கள் குறித்து தான் ஆய்வு செய்தேன் என்று கூறினார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டும், சில திட்டங்கள், ஒரு வேலை கூட நடைபெறவில்லை என்பது வியப்பளிக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந் நிலையில், ஒருமுறை பரிணாம வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் பா.ஜ.,வுக்கு எங்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததோ, அங்கெல்லாம் பழைய சாதனைகளை முறியடித்து, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன்; என்றும் அவர் மேலும் கூறினார்.

 

அத்துடன்,சாமானியர்களுக்காக நாங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க இரவு பகலாக உழைக்கிறோம்.

கடந்த 1 வருடத்தில் வளர்ச்சி புதிய வேகம் பெற்றுள்ளது. இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

 நல்லாட்சி என்பது பா.ஜ.,வின் அடையாளம். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாட்டிலும், உலகிலும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., அரசு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவருக்கும், பா.ஜ.க  தொண்டர்களுக்கும், மாநில மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; என்று  அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi is proud


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->