பெண் பாதுகாப்பு இல்லாமல் சுதந்திர கொண்டாட்டம் எதற்கு-காந்தியின் கருத்தை பகிர்ந்த இயக்குநர் அட்லீ
Director Atlee shares Gandhis point of view of freedom celebration without women protection
ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமான இயக்குனர் அட்லீ, தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருகிறார். இதற்கிடையே ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முதல் படத்திலேயே வெற்றி பெற்றார்.
தொடர்ந்து இவரின் இரண்டாவது படத்தில் நடிகர் விஜய் நடித்த நிலையில், தெறி படம் ஹிட் படமாக அமைந்தது. பின்னர் அடுத்த ஆண்டே மெர்சல் திரைப்படத்தையம் இயக்குனர் அட்லீ இயக்கினார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி, அவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் இன்று 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெண் பாதுகாப்பு குறித்து மகாத்மா காந்தி சொன்ன கருத்தை, இயக்குநர் அட்லீ தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளார் . அதில், இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தி கூறிய கருத்தை, அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
English Summary
Director Atlee shares Gandhis point of view of freedom celebration without women protection