மயிலாடுதுறை எம்எல்ஏ செருப்பை கையில் ஏந்திய பெண் செவிலியர் - அதிர்ச்சி வீடியோவால் அதிர்ந்த எச். ராஜா! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ-வின் செருப்பை அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கையால் எடுத்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா விடுத்துள்ள செய்தி குறிப்பில், "தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாத பூஜை செய்து அவர்களை கெழரவிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். 

பள்ளி குழந்தைகளுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் பாத பூஜை செய்து அவர்களுக்கு நற்பண்புகள் குறித்து உபதேசிக்கும் காணொளியை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். 

ஆனால் அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவரை தனது காலணியை எடுத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்க வைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மோசமான செயலை பாருங்கள்..!! 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான திரு.ராஜ்குமார் MLA அவர்கள் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவரை தனது செருப்பை எடுக்க வைத்து தனது கால் பாதத்தின் அருகில் வைக்கச் செய்த வேதனைக்குரிய நிகழ்வைத்தான் இந்த காணொளியில் நாம் அனைவரும் பார்க்கிறோம். 

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்ற மகாகவி பாரதியார் பிறந்த மண்ணில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று திருமதி.சோனியாகாந்தி அவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கற்றுத் தரவில்லை போலும்" என்று எச் ராஜா விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayiladuthurai Congress MLA slipper government nurse take BJP H Raja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->