#போலி_டாக்டர்_பட்டம் : உயர் நீதிமன்றம் அதிரடி.! விழி பிதுங்கும் இயக்குனர் ஹரிஷ்.!  - Seithipunal
Seithipunal


போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் இயக்குனர் ராஜு ஹரிஷ் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு முத்திரையை முறைகேடான வகையில் பயன்படுத்தி சினிமா பிரபலங்கள் பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டமானது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் இந்த பட்டத்திற்கும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்த நிலையில் இது குறித்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  இதையடுத்து இத்தகைய போலி டாக்டர் பட்டத்தை பணம் வாங்கிக்கொண்டு பிரபலங்களுக்கு வாரி வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகினார். 

மேலும், அவர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் ராஜூ ஹரீஷ், "அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் தொடர்பு இல்லை. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய நபர்களை ஊக்குவிக்கும் வகையில் தான் விருது வழங்கப்பட்டது." என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டதில் கொரட்டூர் காவல் நிலையம் அவரது ஜாமீன் மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அடுத்து இயக்குனர் ராஜு ஹரிஷ் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Harish Raju Request declined by highcourt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->