சோகத்தில் திரையுலகம் - பிரபல இயக்குனர் ஜெயபாரதி காலமானார்.! - Seithipunal
Seithipunal


1979-ம் ஆண்டு வெளியான படம் 'குடிசை'.  கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை இயக்கி பிரபலமானவர் ஜெயபாரதி. இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ஜெயபாரதி இயக்கத்தில் 'ஊமை ஜனங்கள்', 'ரெண்டும் ரெண்டும் அஞ்சு', உச்சி வெயில்', 'நண்பா நண்பா', 'குருஷேத்திரம்', 'புத்திரன்' உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாகின.

இதற்கிடையே, இயக்குனர் ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இயக்குனர் ஜெயபாரதி இன்று காலை ஆறு மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இவரது மறைவு திரைபிரபலன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director jeyabarathi passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->