என்ன பெத்ததுக்கு உனக்கு இதான் தண்டனை - தாயை அரிவாளால் வெட்டி சாய்த்த இளைஞர்.!
youth arrested for murder mother in kerala
கேரளா மாநிலத்தில் உள்ள தாமரசேரி அருகே புதுப்பாடி பகுதியை சேர்த்தவர் சுபைதா கைக்கால் மகன் ஆஷிக். கணவனை விட்டு பிரிந்து தனியாக மகனை வளர்த்து வரும் இவர் திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் சமையலில் உதவி செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்து மகனை வளர்த்தார்.
பள்ளி பருவம் முதல் நன்றாக படித்து வந்த ஆஷிக் புதிய நண்பர்களின் அறிமுகத்தால் தடம் மாறி போதை மருந்து உட்கொள்ள ஆரம்பித்தார். அன்றிலிருந்து வீட்டில் தாயாரை பணம் கேட்டு துன்புறுத்தி வந்தார். நாளடைவில் போதைக்கு அடிமையான ஆஷிக் பெங்களூருவில் உள்ள போதை ஒழிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டு 10 மாத சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் வீடு திரும்பினார்.
இதற்கிடையே தாய் சுபைதாவுக்கு மூளையில் கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் தனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் ஆஷிக் கடந்த ஜனவரி 18 அன்று தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆஷிக் அரிவாளை கொண்டு சுபைதாவின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சுபைதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த அக்கம் பக்கத்தினரிடம் ஆஷிக் தன்னைப் பெற்றெடுத்ததற்காக அவளைக் கொலை செய்தேன் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். உடனே அவர்கள் ஆஷிக்கை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested for murder mother in kerala