"என் தம்பி ஞானசேகரன்" சபாநாயகர் அப்பாவு பேசிய வீடியோ வைரல்!
DMK Appavu AU Case DMK MK Stalin
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஞானசேகரனை, என் தம்பி என சபாநாயகர் அப்பாவு அழித்து பேசிய காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்த காணொளியை அதிமுக ஐடி விங்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஞானசேகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.
அதே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாலியல் குற்றவாளியை என் தம்பி என பாசமுடன் அழைக்கும் சபாநாயகர் அப்பாவு..
திமுகவின் அனுதாபி , ஆதரவாளர் என்பது சட்டசபையில் தெரிந்து விட்டது..
திமுகவினரின் தம்பி என்பதும் இந்த காணொளி முலம் தெரிந்து விட்டது..
ஆனால் #யார்_அந்த_SIR என்ற கேள்விக்கான விடை மட்டும் இன்னும் தெரியவில்லை...
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அந்த சார் யார் என்பது வெளிவரும் என நம்புவோம்..
அது தெரியும் வரையிலும்,பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரையிலும் அதிமுகவின் போராட்டம் தொடரும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
DMK Appavu AU Case DMK MK Stalin