உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் மாதம், ஒன்றாம் தேதி, கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

மொத்தம் 18 ஆண்கள், 12 பெண்கள் என 30 பேர் ஆதி கைலாசுக்கு சாமி தரிசனம் செய்ய பயணம் மேற்கொண்ட நிலையில், வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு 30 பேரும் சிக்கிக் கொண்டனர். 

இதில் 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உத்தரகாண்ட் மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு ராணுவத்தின் மூலம் சிதம்பரத்தை சேர்ந்த தமிழர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

மேலும், அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசிய .முதல்வர் முக ஸ்டாலின், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttarakhand Landslide CM MK Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->