நடிகர் விஜய்யின் கடைசி படம்! அடுத்தாண்டு அக்டோபரில் வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "தி கோட்" திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதமே அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது 69 வது படத்துடன் திரையில் நடிப்பதை நிறுத்தி கொண்டு முழுநேர அரசியல் பணிக்கு செல்ல உள்ளதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, அவரின் கடைசி படத்தை, நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், படத்தில் நடிகர்கள் மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கே.வி.என். ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அடுத்தாண்டு அக்டோபரில் திரைப்படம் வெளியாகிறது என்று, படத்தின் ஹயாரிப்பு நிறுவனமான கே.வி.என். ப்ரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது. 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay Thalapathy 69 movie HVinoth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->