மது ஒழிப்பு மாநாட்டுக்கு கனிமொழியை கூப்பிடுங்க திருமாவளவன் - நறுக்குன்னு கேட்ட அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்ததாவது, "உண்மையிலேயே உங்களுக்கு மாநாடு வெற்றி பெற வேண்டும் என்றால், சகோதரி கனிமொழியை  கூப்பிடுங்கள். திமுகவில், ஆட்சியில் இருக்கிறார்கள் அவர். 

கனிமொழி தான் மதுவிலக்கை பற்றி பேசியிருக்கிறார்கள். மாநாட்டில் அவரை கூப்பிட்டு பேச வையுங்கள். அவருக்கு உண்டான அந்த பொறுப்பை கொடுத்து, நீங்கள் உங்கள் அண்ணனிடம் சென்று, தமிழ்நாட்டில் எவ்வளவு பெண்கள் தாலி அறுத்துக்கிட்டு இருக்காங்க என்பதை எடுத்து சொல்ல சொல்லுங்கள். மேலும், 

* இந்தியாவில் அதிக இளம் விதவைகள் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள், 
* இந்தியாவில் அதிக சாலை விபத்துக்கள் தமிழகத்தில் தான் நடக்கிறது, 
* இந்தியாவில் அதிகமான மனநல நோயாளிகள் தமிழகத்தில் தான் இருக்கிறார்கள், 
* இந்தியாவில் அதிக கல்லீரல் பிரச்சனை தமிழகத்தில் தான் இருக்கிறது, 
* இந்தியாவில் அதிக தற்கொலைகள் தமிழகத்தில் தான் நடக்கிறது. இது அனைத்திற்கும் காரணம் மது என்று, அவர்கள் அண்ணனிடம் கூறி, எப்படியாவது தமிழ்நாட்டில் இளைஞர்களையும், பெண்களையும் காப்பாற்றுங்கள் என்று சொல்ல சொல்லுங்கள். உங்க மாநாட்டு அந்த அம்மாவை (கனிமொழியை) அழைத்து பேச வையுங்கள், சொல்ல வையுங்கள். 

இது விளம்பரப்படுத்தக்கூடிய பிரச்சனை கிடையாது. இது சீரியஸ் பிரச்சனை. மதுவை ஒழிக்கணும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. திருமாவளவனுக்கு உண்மையிலேயே மது ஒழிக்க வேண்டும் என்று அக்கறை இருந்தால், முதலில் நேராக எங்களிடம் தான் வந்திருக்க வேண்டும். 

ஏனென்றால் இன்றைக்கு தமிழகத்தில் மது அருந்துகின்ற சமுதாயமும் ஒன்று வன்னியர் சமுதாயம், இரண்டாவது பட்டியலின சமுதாயம். இந்த இரண்டு சமுதாயம் சேர்த்தால் கிட்டத்தட்ட தமிழகத்தில் 40 விழுக்காடு இருக்கிறார்கள். இந்த ரெண்டு சமுதாயம் மதுக்கு அடிமையாகி கொண்டு, முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த ரெண்டு சமுதாய மக்களிடமிருந்து இந்த மதுவை எப்படி ஒழிக்கலாம், இந்த ரெண்டு சமுதாயத்தையும் எப்படி முன்னேற்றலாம் என்று அக்கறை அவருக்கும் இருக்க வேண்டும். இதற்காக எங்களிடம் வந்து பேசி இருக்க வேண்டும். 


 

இந்த சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் உண்மையிலேயே அவருக்கு இருந்திருந்தால், அவர் எங்களிடம் வந்திருப்பார். அதை விட்டுவிட்டு நாங்கள் மாநாடு நடத்துகிறோம். அவரை கூப்பிடுகிறோம். இவரை கூப்பிடுகிறேன், யாராவது கூப்பிட்டு விட்டு போங்க.. ஆனால், எங்களை இழிவு படுத்தாதீர்கள்"என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to VCK Thirumavalavan DMK Kanimozhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->