அவர்களின் புறக்கணிப்பால் ஏற்பட்ட வலிகள், அவமானங்கள் உயிர்விடும் வரை மறக்கயியலாது - இயக்குனர் தங்கர்பச்சான் வேதனை.! - Seithipunal
Seithipunal


திரைப்பட வணிகர்களின் புறக்கணிப்பால் ஏற்பட்ட வலிகளும், அவமானங்களும் என் உயிர்போகும் வரை மறக்க முடியாது என்று, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அழகி. இந்த திரைப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ் மற்றும் தேவயானி, மோனிகா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்று வரை ரசிகர்கள் மத்தியில் இந்த அழகி படத்துக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. 'ஒளியிலே தெரிவது தேவதையா' என்ற அந்த பாடல் 90களில் பிறந்தவர்களுக்கு இனிமையான ஒரு பாடல் என்பதை மறுக்க முடியாது.

இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் தங்கர்பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"தங்கரின் அழகிக்கு வயது 20

20வது ஆண்டுகள் உருண்டோடியதை நம்பமுடியவில்லை! அழகியின் தாக்கத்தை, நினைவுகளை யாரேனும் நாளும் பகிர்கின்றனர். 

திரைப்பட வணிகர்களின் புறக்கணிப்பால் ஏற்பட்ட வலிகள், அவமானங்கள் உயிர்விடும் வரை மறக்கயியலாது! திரைப்பட வரலாற்றில் அழகி பேசு பொருளானது மக்களால்தான்" என்று இயக்குனர் தங்கர்பச்சான் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Thangar pachan Say About Azhaki movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->