விடுதலை 2 படம் தாமதத்திற்கு காரணம் என்ன?    - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி ஆரம்பமானது. இந்த விழாவில், ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடப்படுவது வழக்கம்.

அதன் படி இந்த வருடம் 57 நாடுகளிலிருந்து மொத்தம் 127 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், இந்த விழாவின் இறுதி நாளான நேற்று, விழாவில், பங்கெடுத்த தமிழ்ப் படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், சிறந்த இயக்குநருக்கான விருதை இயக்குநர் வெற்றிமாறன் பெற்றார்.

அதன் பிறகு அவர் பேசியதாவது, “படத்தின் கதைக்களத்தை பாதிக்காதபடி சில சமரசங்கள் செய்கிறோம். அதனால் அவை சில நேரங்களில் சாதாரணமான படங்களாக வெளிவரும். நிறைய குறைகள், தவறுகளோடுதான் படங்களை எடுத்து முடிக்கிறோம். கதையின் நோக்கம், அதன் குறைகளை மறக்கடிக்கச் செய்கிறது. அதற்குத்தான் இந்த பாராட்டுகளும் அங்கீகாரமும் என நான் நம்புகிறேன். 'விடுதலை' போன்ற படத்துக்கு இந்தப் பாராட்டு கிடைப்பது மகிழ்ச்சி.

இயற்கையான பனிப்பொழிவில் நூறு நாட்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்க முயற்சித்து முடியாததால் செயற்கை பனிப்பொழிவை உருவாக்கினோம். இதனால்தான் ‘விடுதலை2’ திரைப்படம் தாமதமாகியுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director vetrimaran speech chennai international movie festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->