தளபதி 66 படத்தில் ஹீரோயின் இந்த பாலிவுட் நடிகையா.? உற்சாகத்தில் ரசிகர்கள்.!
disha pathani heroine for thalapathi 66
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார்.
சமீபத்தில் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார்.
தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் இந்தி நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, நடிகை ராஷ்மிகா மந்தனா இதில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
disha pathani heroine for thalapathi 66