தனது தீராத காதலை காட்டிய திரிஷா.. வைரலாகும் புதிய டாட்டூ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் படக்குழுவினருடன் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த ப்ரோமோஷன் விழாக்களின் போது இதுவரை யாரும் கண்டிராத திரிஷாவின் டாட்டூ புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி இருக்கிறது.

மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இரண்டு பாகங்களாக  உருவானது. இத்தனை படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் வருகின்ற 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு படக் குழுவினர் இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு சென்று  பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ப்ரொமோட் செய்து வருகின்றனர். இதில் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்து வருகிறார்.

இது தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயுடன் லியோ படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா. 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்திருக்கிறார் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா எப்போதுமே டாட்டூக்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். நீமோ என்ற மீனை தனது  நெஞ்சில் டாட்டூ குத்தியிருந்தார். இதனை நாம் அனைவரும் பார்த்திருப்போம். மேலும் தனது ராசியை கைகளில் டாட்டூவாக குத்தியுள்ளார்.

இது தவிர திரிஷா தனது முதுகு பக்கத்தில் மூன்றாவதாக டாட்டூ ஒன்று குத்தி இருக்கிறார். அந்த டேட்டுவில் சினிமாவின் மீதான தனது காதலை பறைசாற்றும் வகையில் கேமரா மற்றும்  கிளாப்  போர்ட் ஆகியவற்றை தனது முதுகுப் பகுதியில் டேட்டூவாக குத்தியிருக்கிறார் திரிஷா. 2016 ஆம் ஆண்டு இந்த டாட்டூவை போட்டு இருந்தாலும் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் போது தான் இது பிரபலமாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know where Trisha got her new tattoo?


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->