வடசென்னை 2 இயக்குனர் யார் தெரியுமா? - ரசிகர்கள் ஷாக்! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’  திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கினார். இந்த படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மாபெரும் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

வடசென்னை’யின் வெற்றி ரசிகர்கள் மத்தியில் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை கிளறியது. அதேபோல் ‘விடுதலை’ படத்தின் ப்ரோமோஷன்களில் பேசிய வெற்றிமாறன் ‘வட சென்னை 2’ உருவாவது நிச்சயம் என்று கூறியிருந்தார்.‘விடுதலை 2’ படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருக்கும் வெற்றிமாறன் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ‘வடசென்னை 2’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வடசென்னை 2’ படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதில்லை என்றும், அவருக்கு பதிலாக அவரின் உதவி இயக்குநர் கார்த்திகேயன் இயக்கவுள்ளதாகவும், படத்தை வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், படத்தில் தனுஷ் மற்றும் அமீர் நடிக்கப்போவதில்லை என்றும், அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know who is the director of vadachennai 2 Shock the fans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->