அஸ்வினால் தள்ளிப்போகும் என்ன சொல்லப் போகிறாய்.! கோபத்தில் தயாரிப்பாளர்.!
Enna Solla pogirai movie release delay
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடம் பிரபலமடைந்தவர் தான் அஸ்வின். இவர் நிறைய ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இவரது முதல் திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். இதன் மூலம் அஸ்வின் ஹீரோவாக வெள்ளித்திரையில் களமிறங்குகிறார். அவரது முதல் படமான என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அஸ்வின் ஆர்வக்கோளாறில் ஓவராக பில்டப் கொடுத்து பேசி பலரையும் எரிச்சலூட்டினார்.
முதல் படத்திலேயே இவ்வளவு திமிராக பேசுகிறார் என்றும் அவரை கலாய்த்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வின் நான் ஆர்வக்கோளாறில் பதற்றத்தில் இப்படி எல்லாம் பேசிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். ஆனாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை.
இதனால், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அந்த படத்தின் தயாரிப்பாளர்தான். ஏனென்றால் இந்த மாத இறுதியில் என்ன சொல்லப் போகிறாய் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், அஸ்வின் பேச்சு படத்தின் மீது ஒரு விதமான வெறுப்பை ஏற்படுத்தி உள்ளதால், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் அந்த படத்தை வாங்க பயப்படுகிறார்களாம்.
English Summary
Enna Solla pogirai movie release delay