தோனியை நான் புது மனிதராகத்தான் பார்ப்பேன்; ஆல்ரவுண்டர் அஸ்வின்..!
I will see Dhoni as a new man
தோனியை பார்த்தே 10 வருஷம் ஆகிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மீண்டும் சி எஸ் கே அணிக்காக தோனியோடு விளையாடுவதுமகிழ்ச்சி அளிக்கிறது.
அதிலும், “நான் வீரர்கள் அறையில் தோனியைப் பார்த்தே 10 வருஷம் ஆகியிருக்கும். அவரே இப்போது என்னைப் புது மனிதராகதான் பார்ப்பார். நானும் அவரை அப்படிதான் பார்ப்பேன். புனே அணியில் அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினாங்க. ஆனா மீண்டும் சென்னை அணிக்கு வந்து அவர் கப் அடிச்சாரு. அவர்கிட்ட கத்துக்க ஏராளமான விஷயங்கள் இருக்கு. அவர் வேற லெவல் ஆளு” எனப் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு நடுவே தோனி போலவே ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கியவர் அஸ்வின்.
டெஸ்ட் தரவரிசையில் சிறந்த பவுலராகவும், ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைத்தனர்.
அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்ததை அடுத்தே அஸ்வின் ஓய்வை அறிவித்ததாக சொல்லப்படுகிறது. குறித்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருகிறது.
மேலும் அஸ்வின் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து க்ளப் போட்டிகளில் விளையாடுவேன் என கூறியுள்ளமை அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
I will see Dhoni as a new man