விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கண்தான செயலி அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  'தளபதி விஜய் விழியகம்' என்ற கண் தான செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நற்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், விரைவில் அரசியலில் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கனிசமான இடங்களில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றனர். இதில் ஒரு சில இடங்களில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கே கடும் போட்டி கொடுத்தனர்.

நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே அவரது புகைப்படத்தையும், கட்சியின் கொடியை மட்டுமே பயன்படுத்தி அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  'தளபதி விஜய் விழியகம்' என்ற கண் தான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இச்செயலியை அறிமுகப்படுத்தினார். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eye donation app introduce Vijay makkal iyyakkm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->