லியோ திரைப்படமும் எல்.சி.யு தானா.? இணைய போகும் முன்னணி நடிகர்! விரைவில் புதிய அப்டேட்! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக   பான் இந்தியா சினிமாவாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்தத் திரைப்படத்தில் விஜயுடன், திரிஷா,  சஞ்சய் தத், இயக்குனர் மிஸ்கின், கௌதம் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன்  ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தனை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் வைத்து  படமாக்கப்பட்டது.

படக்குழுவினரும் அவ்வப்போது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படக்குழுவினர் வெளியிடும் அப்டேட்டுகளையும் டீ கோட் செய்து  சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

கைதி படத்தில் கான்ஸ்டபிளாக நடித்த  மரியம் ஜார்ஜ் லியோ படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் மேலும் விக்ரம் படத்தில்  ஏஜென்ட் டீனாவாக நடித்த வசந்தி காஷ்மீருக்கு  படக்குழுவினருடன் சென்றபோது  இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சல் தான் என ரசிகர்கள் டி கோட் செய்தனர்.

தற்போது திரைப்படத்தினைப் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த அப்டேடின்படி விக்ரம் திரைப்படத்தில்  ஏஜெண்டாக நடித்த ஃபகத் பாசில் லியோ திரைப்படத்திலும் அதே அமர் கதாபாத்திரத்தில் நடிக்கயிருக்கிறார் என்பதுதான். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த கட்ட படப்பிடிப்புகள் துவங்கும் முன்னர் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fahadh fasil will be in the crew of leo official announcement soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->