மதுரை: சிறுமியிடம் அத்துமீறிய பாஜகவின் மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா கைது! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

 பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. மதுரை திருமங்கலம் பகுதியில் தனியார் கல்லூரியில் தலைவராக இருந்து வருகிறார்.

15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவர் எம்.எஸ்.ஷா மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த எம்.எஸ்.ஷா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். எம்.எஸ்.ஷாவுக்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai BJP Member arrested pocso case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->