சிம்புவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.? வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளம் வருபவர் சிம்பு. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் கிளைம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், கொரோனா குமார் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இவர் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fahat fasil may villain For simbu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->