இந்தியா-பாகிஸ்தான் போட்டி: பங்கேற்க உள்ள பிரபல நடிகர்கள்! பலத்த போலீஸ் பாதுகாப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் காண உள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி ஐசிசி 13வது ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இந்திய அணி விளையாடி இதுவரை 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த தொடரின் முக்கிய போட்டியான இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை மறுநாள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

பிசிசிஐ மற்றும் ஐசிசி தரப்பில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நேரில் காண ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாலிவுட் நடிகர் வருண் தவானும் தனது தந்தையுடன் போட்டியை காண வருகிறார். ஐசிசி, பிசிசிஐ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகிகளும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நேரில் காண உள்ளனர். 

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சுமார் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காண உள்ளதால் நரேந்திர மோடி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதில் 7000 குஜராத் போலீஸ், 4000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையின் 3 குழுக்கள், மாநில ரிசர்வ் காவல் படையின் 13 கம்பெனி வீரர்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actors participate India Pakistan match police protection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->