மையோசைட்டிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் தூதராக ஆன பிரபல நடிகை! - Seithipunal
Seithipunal


நடிகை சமந்தா மையோசைட்டிஸ் இந்தியா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளின் தனது நடிப்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசம் கவர்ந்துள்ளார். 

இவருக்கு சமீபத்தில் மையோசைட்டிஸ் என்னும் அரியவகை தசை நோய் ஏற்பட்டிருந்தது. மையோசைட்டிஸ் என்பது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை தசை செல்களுக்கு எதிராக செயல்பட்டு அதை சிதைக்கும் நோயாகும். 

இந்த நோயால் சமந்தா பாதிக்கப்பட்டது பலருக்கும் தெரியவந்தது. கடுமையாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா புதிய படங்களை நடிப்பது தவிர்த்து விட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டார். 

இதனால் சில படங்களுக்கு ஒப்பந்தம் அளித்திருந்த முன்பதிவு தொகையையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து சமந்தா தனது தாயுடன் அமெரிக்காவுக்கு சென்ற அங்கு மையோசைட்டிஸ் நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில் மையோசைட்டிஸ் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் மையோசைட்டிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார். 

இதனால் நாடு முழுவதும் மையோசைட்டிஸ் நோய் குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும் என மையோசைட்டிஸ் இந்தியா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress became the ambassador  Myositis India Charity


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->