ஆஷா போஸ்லேவின் காலை கழுவி முத்தமிட்ட பிரபல பின்னணி பாடகர்!
Famous playback singer who washed and kissed Asha Bhosle leg
மும்பை : பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம் ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை தண்ணீரால் கழுவி கால்களை முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஸ்வரரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியமான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். ராமராஜன் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற " செண்பகமே செண்பகமே " என்ற பாடலை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை " ஸ்வரஸ்வாமினி ஆஷா " என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஜாக்கிசேராப் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பின்னணி பாடகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம் விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவின் கால்களை தண்ணீரால் கழுவி கால்களுக்கு முத்தமிட்டு எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
Famous playback singer who washed and kissed Asha Bhosle leg