சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர் - வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர் - வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் முதல் முறையாக திரையில் அறிமுகமானார். அதன் பின்னர் கத்தி, தங்கமகன், தெறி, பத்து என்றதுக்குள்ள உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை திரட்டியுள்ளார்.

அப்படிப்பட்ட ரசிகர்களில் சிலர் நடிகைகளுக்கு கோயில் கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர். இந்த நிலையில், நடிகை சமந்தாவுக்கு ரசிகர் ஒருவர் கோவில் காட்டியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

ஆந்திரா மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் என்பவர், தனது வீட்டில் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார். இந்தக் கோவிலுக்கான திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை சந்தீப் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன், "நடிகை சமந்தா நடிப்பில் மட்டுமல்ல தொண்டு செய்வதிலும் என்னை மிகவும் கவர்ந்துள்ளார். அவர் "பிரத்யூஷா" என்ற அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் பல சேவைகளை செய்து வருகிறார். 

இதனால் அவர் மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் கூடியது. அதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவருக்கு கோயில் கட்ட முடிவு செய்து, தற்போது இந்த கோயிலை கட்டி உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fan make temple to samantha in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->