நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! - Seithipunal
Seithipunal


மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில், அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர், ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூன் 20ஆம் தேதி முதல் அஜர்பைஜானில்  மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் இப்படத்தை தயாரித்துள்ள  லைகா நிறுவனம், அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையேயே  இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்த நடிகர் அஜித், விடாமுயற்சி படம் ஹாலிவுட் லெவலில் இருப்பதாகவும், இப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியை பாராட்டினார். 

இந்தநிலையில், இந்த படத்தின் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் நிலுவையில் இருந்த நிலையில், இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக, படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Filming of actor Ajiths Vidadhati completed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->