பிக்பாஸ் சீசன் 7 - வெளியானது போட்டியாளர்களின் இறுதி பட்டியல்.!
Final list of bigg boss season 7 contestants
பிக்பாஸ் சீசன் 7 - வெளியானது போட்டியாளர்களின் இறுதி பட்டியல்.!
உலக புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில், ஏழாவது சீசனை இந்த வருடம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஒவ்வொரு சீசன் தொடங்கும் போது போட்டியாளர்கள் யார்? அதன் வீடு என்ன தீமில் இருக்கிறது என்றுத் தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த வகையில், இந்த சீசனில் வீடு இரண்டாக உள்ளது என்பதை முன்பு வெளியான புரோமோவில் கமல்ஹாசனே தெரிவித்து இருந்தார். மேலும், போட்டியாளர்கள் தேர்வு குறித்தும் பல தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்தப் போட்டியின் இறுதிப் பட்டியல் வந்துள்ளது.
அதில், ’குக் வித் கோமாளி’ புகழ் ரவீனா, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, நடிகைகள் தர்ஷா குப்தா, ‘பிகில்’ இந்திரஜா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன், பப்லு பிரித்விராஜ், அபாஸ், விஷ்ணு, மூன்நிலா, சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சர் அனன்யா உள்ளிட்டோரது பெயர்கள் இறுதிப் பட்டியலில் அடிபடுகிறது.
இவர்கள் மட்டுமல்லாது ‘ராஜா ராணி’ சீரியல் விஜே அர்ச்சனா, நாட்டுப்புற பாடகியாகவும் பின்னர் நடிகையாகவும் வலம் வரும் தாமரையின் கணவர் பார்த்தசாரதி, நடிகர் பால சரவணன் ஆகியோரும் இருக்கின்றனர். இருப்பினும், அக்டோபர் ஒன்றாம் தேதி இரவு யார் யார் போட்டியாளர்கள் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும்.
English Summary
Final list of bigg boss season 7 contestants