மாஸ் அப்டேட் கொடுத்த கோட் பட இயக்குனர் - என்னனு தெரியுமா? - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் கோட். இந்தப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அப்பா - மகன் என்று இரட்டை வேடத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார் விஜய். எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், 'கோட்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'கோட்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

'கோட் படத்தின் அடுத்த அப்டேட் மூன்றாவது பாடல்' என்று பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goat movie third song released update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->