COMING NOON... தளபதி விஜய்யின் ''கோட்'' திரைப்படத்தின் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


லியோ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் 68வது திரைப்படமான ''கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்'' (GOAT) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாத், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ''கோட்'' திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மதியம் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். நடிகர் விஜய் நாளை தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி மக்களுக்கு உதவுமாறு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOAT movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->