திரிவேணி சங்கமத்தின் புனித கங்கை நீரை, மொரீஷியஸின் ஏரியில் ஊற்றி வழிபாடு செய்த பிரதமர்..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் திரிவேணி சங்கமத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித நீரை, மொரீஷியஸில் புனித ஏரியான கங்கா தலாவில் ஊற்றி பிரதமர் மோடி வழிபாடு நடத்தியுள்ளார்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.  இந்நிலையில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், அந்த நாட்டின் மிக உயரிய, 'த கிராண்ட் கமாண்டர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் அண்ட் கீ ஆப் த இந்தியன் ஓஷன்' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு அந் நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம் மற்றும் அவரது மனைவி வழங்கி கௌரவித்தனர்.

அந்நாட்டில், இருநாட்டு பிரதமர்களும் இணைந்து, அடல் பிஹாரி வாஜ்பாய் கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தனர். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த நிறுவனம் கற்றல், ஆராய்ச்சி மற்றும் பொது சேவைகளை வழங்கும் மையமாக திகழ்வதுடன், புதிய யோசனைகள் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்ததாக, கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித கங்கை நதியின் தீர்த்தத்தை, மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் உள்ள கங்கா தலாவ் ஏரியில் ஊற்றி வழிபாடு செய்துள்ளார். இது இருநாடுகளிடையேயான கலாசாரம் மற்றும் ஆன்மீகம் இணைப்பின் சான்றாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Prime Minister poured the holy Ganga water from the Triveni Sangam into a lake in Mauritius and worshipped


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->