கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் சசி தரூர் செல்பி; கடுப்பான காங்கிரஸ் மேலிடம்..!
Shashi Tharoor selfie with Kerala Chief Minister Pinarayi Vijayan
இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்துக்கொண்ட காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் புகைப்படம் வைரலாகியுள்ளது. இதனால், காங்கிரஸின் முதலிடம் மீண்டும் கடுப்பாகியுள்ளது. கேரளாவில், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் இருந்து நான்கு முறை தொடர்ந்து எம்.பி.,யாக தேர்வு செய்யபட்டவர் காங்கிரசை சேர்ந்த சசிதரூர். மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்த இவர், ஐ.நா., சபையிலும் உயர் பதவி வகித்தவர்.
அண்மையில் அமெரிக்காவில் பிரதமர் மோடி மற்றும் டெனால்டு டிரம்ப் சந்திப்பை பாராட்டி அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அத்துடன், இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் புகழ்ந்து பேசியிருந்தார். இப்படியான இவரது செயல்கள் காங்கிரஸ் மேலிடத்தை கடுப்பாக்கியது.

அத்துடன், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதியன்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி காங்கிரசை வெறுப்பேத்தியிருந்தார். இதற்கெல்லாம் அவர் உரிய விளக்கத்தை அளித்ததோடு, காங்கிரசுக்கு நான் தேவை என்றால் கட்சியில் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவை இல்லை என்றால் புத்தகங்கள், சொற்பொழிவுகள், உலகம் முழுதும் நிகழ்ச்சிகள் என எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று கூறியிருந்தார்.
தற்போது, கேரள கம்யூனிஸ் கட்சி முதல்வர் பினராயி உடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. டில்லி சென்றுள்ள கேரள பினராயி விஜயன், உடன் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரையும் அழைத்துச்சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாமானை சந்தித்து மாநில நிதி ஒதுக்கிட வலியுறுத்தியுள்ளார்.
அதன் பின்னர் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது சசிதரூர் பினராயை சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மேலிடம் இன்று வெளியான புகைபடத்திற்கு சசிதரூர் செயலுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
English Summary
Shashi Tharoor selfie with Kerala Chief Minister Pinarayi Vijayan