அஜித்தின் ''குட் பேட் அக்லி'' திரைப்படத்தின் நியூ அப்டேட்!  - Seithipunal
Seithipunal



மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதனை அடுத்து நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்திற்கு ''குட் பேட் அக்லி'' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட பாடப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. 

இந்த படபிடிப்பின் போது நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி படபிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றார். 

இந்நிலையில் ''குட் பேட் அக்லி'' திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6:40 மணியளவில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டராக இருக்கலாம் என கருத்து நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Good Bad Ugly Movie New Update


கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவற்றில் எந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் ?




Seithipunal
--> -->