"அஜித்துடன் சேர்வது தான் வாழ்நாள் கனவு." ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஹர்ஷிகா பூனாச்சா. இவர் கடந்த 2008ஆம் ஆண்டில் பியூசி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் 2019ஆம் ஆண்டு வெளியான உன் காதல் இருந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருடன் நடிகை ஹர்ஷிகா ஜாக்கி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் அஜித்தின் தீவிர ரசிகை. 

சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து நடிகை ஹர்ஷிகா, " அஜித் என்ற பெயரிலேயே ஒரு பவர் இருக்கிறது. அவருடன் சேர்ந்து நடிப்பது என்னுடைய வாழ்நாள் கனவாக உள்ளது. அந்த கனவு எப்பொழுது நிறைவேறும் என்று காத்திருக்கிறேன். 

எப்பொழுது நடக்கும் என்பதுதான் தெரியவில்லை. என்னை அவருடன் நடிக்க வைக்கப் போகும் இயக்குனர் யார் என்பதும் எனக்கு தெரியவில்லை. இதுவரை கனவு நிறைவேற சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை. ஆனால்,  கட்டாயம் என்னுடைய கனவு நிறைவேறும் என்று எனக்கு தெரியும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harshika poonacha about ajithkumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->