ராயன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தானே இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'ராயன்'. தனுஷின் 50-வது திரைப்படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்யும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 

தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் அளித்துள்ள 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'ராயன்' திரைப்படம் வெளியாகும் 26-ந் தேதி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

அதன்படி, நாளை மறுநாள் காலை ஒன்பது மணி முதல் அதிகாலை இரண்டு மணிக்குள் ஐந்து காட்சிகள் என்ற அடிப்படையில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high court permission special show of rayan movie


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->