கே.ஜி.எப்- 3 படத்தில் நடிக்கவுள்ள பிரபல பாலிவுட் நடிகர்.?!
hrithik roshan in kgf 3
கன்னட ரசிகர்கள் மற்றுமின்றி சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த படம் கே ஜி எஃப். இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றதையடுத்து.
கே ஜி எஃப் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கொரோனா பெரும் தொற்று காரணமாக கே ஜி எஃப் 2-ஆம் பாகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இதனிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.
தற்போது, பிரசாந்த் நீல்ஸ் சலார் படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தின் பணிகள் முடிந்ததுவுடன் அடுத்ததாக கே.ஜி.எப் 3 படத்தின் வேலைகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.